Touring Talkies
100% Cinema

Tuesday, June 10, 2025

Touring Talkies

அகண்டா 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா நடிகர் ஆதி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் கதாநாயகனாகவும், தெலுங்கில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் ஆதி. தமிழில் அவர் கடைசியாக நடித்த ‘சப்தம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், நேற்று வெளியான தெலுங்குப் படமான ‘அகண்டா 2’ படத்தின் டீசரில் சில விநாடிகள் மட்டும் தோன்றிய ஆதியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவர் அகோரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கலாம் எனத் தெரிகிறது. அவரை நோக்கி வீர வசனம் பேசும் பாலகிருஷ்ணா, எதிரிகளை சூலாயுதம் கொண்டு அழிக்கும் அதிரடியான காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 22 மில்லியன் பார்வைகள் கடந்துள்ளது. மேலும், 24 மணி நேர முடிவில் புதிய சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News