இயக்குனர் செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, ராணா நடித்த ‘காந்தா’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசும் போது துல்கர் சல்மான், என் அப்பா மம்முட்டி மூன்று தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். மற்ற விருதுகளும் ஏராளமாக பெற்றவர். இன்னும் பெறுவார். ஆனால் நான் இதுவரை ஒரு தேசிய விருதும் வாங்கவில்லை. காந்தா படம் பார்த்தவர்கள், விமர்சனங்களில் தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள். அப்படி கிடைத்தால் அது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராணா, நான், பாக்யஸ்ரீ எல்லாரும் போட்டிபோட்டு நடித்தோம். குறிப்பாக குமாரி என்ற கதாபாத்திரத்துக்காக பாக்யஸ்ரீயை தேர்வு செய்ய இயக்குனர் பல மாதங்கள் காத்திருந்தார். அதனால் அந்த கேரக்டர் இப்படத்தில் மிகச் சிறப்பாக வந்துள்ளது.அந்த கால சினிமாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மக்களிடையே சிறந்த வரவேற்பு பெற்றது. இதுவரை நான் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் என் நடிப்பை வைத்து என் அப்பா அதிகம் விரும்பிய படம் காந்தா என்பதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நான் எம்ஜிஆர், ஜெமினி கணேசனை காப்பி பண்ணவில்லை. அவர்கள் தாக்கம் படத்தில் இருந்தால் அதற்கு காரணம் இயக்குனர். ராணாவும் நானும் இந்த படத்தை பணம், வியாபாரத்துக்காக செய்யவில்லை. சினிமாவுக்கான அக்கறை, ஆர்வம் காரணமாக தான் இந்த படத்தில் நடித்தோம் என்றுள்ளார்.

