நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார்பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நரேன் கார்த்திகேயனுடன் மலேசியாவில் நடைபெறும் பந்தயத்தில் கலந்துகொள்ளும் திட்டத்தில் உள்ளார். அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘ஏகே 64’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இந்த நிலையில், பிரபல பான் இந்திய நடிகர் வித்யூத் ஜம்வால் ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது: “நான் தமிழில் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். காரணம், நான் முன்னணி நடிகராக வருவதற்கு முன்பு பில்லா காலகட்டத்தில் அஜித் என்னைப் பற்றி கூறியுள்ளார். அவருடன் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால் தமிழில் ‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’ மற்றும் ‘மதராஸி’ படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் ஹாலிவுட் ஆக்ஷன் படம் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’-ல் நடிப்பது பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.