Friday, April 12, 2024

“70 கிலோ போதை மருந்தை வீட்டில் வைத்திருக்கிறேன்…” – யுவன் சங்கர் ராஜா மனைவியின் வேடிக்கையான பதில்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘யு-1 ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம்தான் யுவன் இசையமைக்கும் படங்களின் இசை உரிமையை வாங்கிக் கொள்கிறது. கூடவே பல்வேறு இசையமைப்பாளர்களின் உரிமைகளையும் வாங்கி விற்பனை செய்து வருகிறது. இசை தொடர்பான பல்வேறு பணிகளையும் இந்த நிறுவனத்தின் மூலமாகச் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

இந்த நிறுவனத்தின் வீடியோ பிரிவிற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி ஸஃப்ரூன் நிஸார் ஒரு நேர்காணலை வழங்கியுள்ளார்.

அந்த நேர்காணலில் அனைத்து வகையான தனிப்பட்ட கேள்விகளுக்கும் அமைதியாக பதிலளித்திருக்கிறார் நிஸார்.

அந்தப் பதில்களில் “யுவன் சங்கர் ராஜாவுக்கு இசை என்பதே ஒரு போதைதான். அவருடைய இசையும் ஒரு போதைதான். கடைசியில் அவரை நேசிக்கும் இசை ரசிகர்களுக்கு அவரும் ஒரு போதைப் பொருள்தான்..” என்று குறிப்பிட்டார் நிஸார்.

அப்போது, “அந்தப் போதைப் பொருளை உங்களுடன் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா…?” என்று வேடிக்கையாக ஒரு கேள்வியைக் கேட்டபோது, “யுவனைத்தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க..? ஆமாம்.. நான் என் வீட்டிலேயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன். நான் எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டுப் போறேன்” என சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News