சமீபத்தில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் நடித்துள்ள ‘பிரீடம்’ திரைப்படம் நேற்று வெளியாவதாக இருந்த நிலையில், சில காரணங்களால் அதுவை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகுமார் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் அவர், “மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் ரத்தம் கொடுத்ததற்கான பணத்தை வாங்காத போது, அவர்கள் நன்றி சொல்வார்கள். அதற்குப் பதிலாக ரஜினி சார் ‘வெறும் பணம்தானே’ என்று சொல்வார்.
அந்த வசனத்தைப் போலவே, நான் பணத்தை மதிக்காமலே இருந்தேன். அதன் விளைவாக கடந்த 40 ஆண்டுகளாக பணமும் என்னை மதிக்காமல் இருந்தது.ஆனால் தற்போது பணத்தின் முக்கியத்துவம் என்ன என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அதை மதிக்கவும் தெரிந்துவிட்டது. எனவேதான், நான் பணத்தை மதிக்கத் தொடங்கிய பிறகு, பணமும் என்னை மதிக்கத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சசிகுமார்.