நடிகை ஒய்.ஜி.மதுவந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில், எதிர்ப்பாளர்கள்போல் எனக்கான ஆதரவாளர்களையும் சமூகத்தில் நான் சம்பாதித்திருக்கிறேன். அவர்கள் தரும் வாழ்த்தும், ஊக்கமும் தான் எனக்கான ‘அவார்டு’. கட்சியின் காரியவாதியாக மக்களை சந்தித்துப்பேசி, மக்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பதால் என்னை நான் எப்போதும் மக்கள் பிரதிநிதியாகத்தான் பார்க்கிறேன். நாடகம், அரசியல், மேடைநிகழ்ச்சி, தயாரிப்பு, யுடியூப் வீடியோ என பொழுது முழுவதும் வேலை இருப்பதால் பரதம் ஆடுவதை குறைத்துக் கொண்டேன். எதையும் ஒளிவுமறைவின்றி பேசுபவள் என்பதால் கிசுகிசுக்களில் நான் சிக்குவதில்லை. சினிமாவில் முன்புபோல் மேடை நாடக கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றுள்ளார்.
