Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

வரலட்சுமிக்கு தடை போட்ட சரத்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை வரலட்சுமி, திரைத்துறைக்கு வந்தது எப்படி என அவரது தந்தையும் நடிகருமான சரத்குமார் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

“எனது முதல் மனைவி சாயா தேவி. எங்கள் மகள்தான் வரலட்சுமி. ஆனால் இவரையும் பாசத்துடன் நடத்துவார், எனது  இரண்டாவது மனைவி ராதிகா.

வரலட்சுமியிடம், ‘எதைச் செய்தாலும் அப்பாவைக் கேட்டு செய்’ என்றே இருவரும் சொல்வார்கள்.  ஆனால் ஒரு விசயத்தில் நேர்மாறாக நடந்தது.

ஒரு நாள் வரலட்சுமி என்னிடம், தான் சினிமாவில் நடிக்க விரும்புவதாகச் சொன்னார். நான், மறுத்துவிட்டு படப்படிப்புக்கு வந்துவிட்டேன்.

கொஞ்ச நேரத்தில், வருவின் அம்மா சாயாவும், ராதிகா இருவருமே ஒன்றாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டனர். ‘ஏன் வரு சினிமாவில் நடிச்சா என்ன. அவள் விருப்பப்படி நடிக்கட்டுமே’ என்றனர்.

அந்த அளவுக்கு சாயாவும், ராதிகாவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்களது விருப்படியே வரலட்சுமி, சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார் சரத்குமார்.

- Advertisement -

Read more

Local News