சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் நாளில் பெற்ற வசூல் 17 கோடி 75 லட்சம் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த தொகை தமிழகத்தில் மட்டும் பெற்ற வசூலை குறிக்கிறது. உலகம் முழுவதிலான வசூலை கணக்கிட்டால், இது 25 கோடிகள் வரை செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு எவ்வித சிறப்பு காட்சிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மேலும், டிக்கெட் விலைகளும் அதிகமாக நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, இந்த வசூல் முற்றிலும் சரியானதே என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறை காரணமாக, திரையரங்குகளில் மக்களின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், படத்தின் வருங்கால வசூல் மிகச்சிறந்ததாக இருக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
‘ரெட்ரோ’ திரைப்படம் 100 கோடியை கடக்குமு? இது சூர்யாவிற்கு ஒரு பெரிய வெற்றிப் படமாக அமையுமா? என்பதே தற்போது பலரிடையிலும் எழும் கேள்வியாக உள்ளது. இதற்கு முன் சூர்யா நடித்த சிங்கம் 2, சிங்கம் 3, காப்பான் மற்றும் கங்குவா போன்ற திரைப்படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.