Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘எங்கேயும் எப்போதும்//’ சர்வானந்த்துக்கு திருமணம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது. இதனை சர்வானந்த் குடும்ப நண்பர் ஒருவர் மறுத்து இருந்தார். சர்வானந்த் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பி இருக்கிறார் என்றும், திருமண வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். ஆனாலும் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருக்கிறார். ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

Read more

Local News