Wednesday, April 10, 2024

ரஜினியின் 171படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்?  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், ராணா, ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார், ரஜினிகாந்த். அவரின் 171-வது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர்’ படத்தைப் போன்றே  இதிலும் ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒரு நடிகரை நடிக்க வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கவுரவ வேடத்தில் நடிக்க ஷாருக்கானிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரன்வீர் சிங்கிடம் கேட்டதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டாராம்.கதை பற்றி  லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News