Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

பிரபல நடிகை சித்ரவதை செய்து கொலை?; தாயார் பகீர் குற்றச்சாட்டு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே,  தூக்கு போட்ட நிலையில் ஓட்டல் ஒன்றில்  சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். மறுநாள் தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்தார் ஆகான்க்சா. ஆகான்க்சா துபேவின் தாயார் மது கூறும்போது, “சமர்சிங்குடன் ஆகான்க்சா 3 ஆண்டுகளாக சேர்ந்து ஆல்பங்களில் பணியாற்றினார்.  ஆனால், ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை. அந்த வகையில் சமர் கொடுக்க வேண்டிய பணம் ரூ.3 கோடி இருக்கும். ஆகான்க்சா பணம் கேட்கும்போதெல்லாம், சமர் அவளை அடித்து, சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.

பிற கலைஞர்களுடன் பணியாற்ற முயற்சி செய்தபோதும், அவளை   துன்புறுத்தி வந்து உள்ளார்.   ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை” என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

வாரணாசி போலீசார், மதுவின் புகாரின் பேரில் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News