சமீபத்தில் இரண்டு பெண்கள் டாஸ்மாக்கில் நின்று மது வாங்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணியடி. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும். All dravidias கதறிங் on my timeline. உண்மையை சுட்டிக்காட்டிட்டா இந்த திரா-விடியா மூஞ்சிகளுக்கு ஒரே defence தான் – கேள்வி கேட்டவரை அசிங்கமா பேசுவது. இன்னும் தமிழ் நாட்டில் குடிக்காதவர்கள் உள்ளோம் என்பதை யோசிக்க கூட முடியாத, சுய ஒழுக்கமென்றால் என்னவென்றே அறியாத முழு நோயாளிகள்’’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதை பார்த்து பலரும் கஸ்தூரியை வறுத்தெடுத்து எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமான நவீன், தனது ட்விட்டர் பக்கத்தில், “பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாம் கெடாத சமூகம் சாமான்ய பெண்கள் சரக்கடிக்கும்போதுதான் கெடுமா? மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு. பெண்னாக இருந்துகொண்டு திராவிடியா என்று சொல்வதை நிறுத்துங்கள்” என்று பதிலடி கொடுத்து இருக்கிறார்