ரஜினியை பார்க்கக்கூடாது என தனது தம்பியும் இயக்குநருமான கங்கை அமரனுக்கு, இளையராஜா உத்தரவுபோட்டார் என்பது, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனல் மூலம் தெரிய வந்துள்ளது.
பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்க, ரஜினி ஹீரோவாக நடித்த படம், வீரா. இசை.. இளையராஜா
இந்த படத்துக்காக, உன்னை என் அருகில் சேர்த்தது மற்றும் கொஞ்சி கொஞ்சி என இரண்டு பாடல்கள் ரெடியாயானது. இந்த இரண்டு பாடல்களும் ரஜினிக்கு பிடிக்கவில்லை. மாற்றச் சொன்னார். இதையடுத்து தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், இளைராஜாவிடம் கூறினார். அதில் அவருக்கு வருத்தம். ஆனாலும் ஒரு பாடலை மாற்றி கொடுத்தார்.
அதன் பிறகு ரஜினி படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை.
ஆனால், கங்கை அமரனுக்கு ரஜினி நல்ல நண்பர். ஆகவே அடிக்கடி சந்திப்பார்.
இதை அறிந்த இளையராஜா, “ எனக்கு வாய்ப்பு கேட்டு ரஜினியிடம் பேசுகிறாயா.. அவரை ஏன் சந்தித்தாய்” என்று கேட்டு திட்டி இருக்கிறார்.
இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..