தனுஷூக்கு அழரது தந்தை கஸ்தூரிராஜா வைத்த பெயர் வெங்கட் பிரபு. தனுஷ் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவெடுத்த போது அதே பெயரில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பிறகு, கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு இருப்பதால், வேறு பெயரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுத்தனர்.
அப்போதுதான் கமலின் குருதிப்புனல் படத்தை தனுஷ் பார்த்திருந்தார். இந்த படத்தில் வரும் தனுஷ் என்கிற கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.
ஆகவே தந்தை கஸ்தூரி ராஜாவின் ஒப்புதலுடன் தனுஷ் என்று மாற்றிக்கொண்டார்.
ஆக, தனுஷ் என்ற பெயர் வருவதற்கு ஒருவகையில் கமல் காரணமாக இருந்திருக்கிறார்!