Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ஐஸ்வர்யா ராய் சொத்து மதிப்பு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை தமிழில் இருவர் படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் என்று பொன்னியின் செல்வன் வரை நடித்து இருக்கிறார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்ததோடு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் சொத்து விவரங்கள் இந்தி இணையதளங்களில் வெளியாகி உள்ளன. அதில் ஐஸ்வர்யா ராய்க்கு மொத்தம் ரூ.800 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

மும்பை ஜூகு பகுதியில் உள்ள ஆடம்பரமான ஜல்சா பங்களாவில் கணவருடன் ஐஸ்வர்யா ராய் வசிக்கிறார். இந்த பங்களாவின் மதிப்பு ரூ.112 கோடி.

பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5 படுக்கை அறை கொண்ட 5 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை ரூ.21 கோடிக்கு வாங்கினார். மும்பை வோர்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 37-வது மாடியில் ரூ.41 கோடி மதிப்புள்ள வீடு வைத்துள்ளார். இன்னும் பல இடங்களில் சொத்துகள் உள்ளன.

துபாயில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் பெயரில் கோல்ப் மைதானம், நீச்சல் குளம், நீர் விழ்ச்சி வசதிகள் கொண்ட ஆடம்பர வில்லா இருக்கிறதாம்.

விடுமுறைக்கு குடும்பத்தோடு அங்குதான் செல்கிறார். விலை உயர்ந்த லெக்ஸஸ், ஆடி, ரோல்ஸ் ராய் கார்கள் வைத்துள்ளார். ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

- Advertisement -

Read more

Local News