இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர்.
தற்போது தனது மனைவி ஷோபாவுடன் சென்னையில் வசித்து வருகிறார். மேலும், தனது மகன் விஜய் தொடங்கியுள்ள தமிழ்த் த.வெ.க இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் எஸ்.ஏ.சி கலந்துகொள்கிறார். அவர் பல தொலைக்காட்சி நேர்காணல்களில் விஜய்யை பற்றிய பல சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.
அந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியினரின் 52வது திருமணநாளைக் கொண்டாடி வருகின்றனர். இந்த சிறப்புநாளில், எஸ்.ஏ.சி தனது மனைவிக்கு திருமண நாள் பரிசாக புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றினை வாங்கித் தந்துள்ளார். அந்தக் கார் ஷோரூமில் டெலிவரி எடுத்ததற்கான வீடியோவை எஸ்.ஏ.சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் காரின் விலை சுமார் ரூ.75 லட்சம் என கூறப்படுகிறது. கார் வாங்கிய பிறகு, அங்கேயே இருவரும் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.