இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் அனுராக் காஷ்யப். தேவ் டி , அக்லி , பாஞ்ச் , பிளாக் ப்ரைடே , கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி இருக்கிறார்.

தமிழில் இவர் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். அதனைத்தொடர்ந்து, ‘லியோ’, ‘மகாராஜா’ , ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் சமீபத்தில் பாலிவுட் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகும் ‘டகோயிட்’ படத்தின் மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.இந்நிலையில், தெலுங்கை தொடர்ந்து கன்னடத்திலும் அனுராக் நடிகராக அறிமுகமாக உள்ளார். அதன்படி, இயக்குனர் சுஜய் சாஸ்திரி இயக்கும் 8 என்ற படத்தில் அனுராக் நடிக்கிறார்.