கண்ணப்பா” என்பது வரலாற்று பின்னணியில் ஆன்மிக கலந்த ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம், சிவனின் தீவிர பக்தரான கண்ணப்பர் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு மஞ்சு கண்ணப்பராகவும், பிரபாஸ் ருத்ராவாகவும், மோகன்லால் கிராதாவாகவும் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


தற்போது, விஷ்ணு மஞ்சு ஒரு நேர்காணலின் போது, பிரபாஸும் மோகன்லாலும் இப்படத்தில் நடிக்க எந்த சம்பளமும் வாங்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.