பாலிவுட் திரையுலகில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணை ஜோடி என்றும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், பதான், ஜவான் போன்ற படங்கள் மிகுந்த வெற்றியடைந்து, இந்த ஜோடிக்கு உறுதியான இடத்தை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ எனும் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துவருகின்றனர்.

இந்த படத்தின் சிறப்பம்சமாக, ஷாருக்கானின் மகள் சுஹானா கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது வெளியாகிய தகவலின்படி, இந்த படத்தில் சுஹானா கானுக்கு அம்மாவாக தீபிகா படுகோன் நடிக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. இதனால் கதாநாயகி என்ற நிலை பாதிக்கப்படாமல், தீபிகா படுகோனின் கதாபாத்திரம் படத்தில் முக்கியத்துவத்துடன் திரைக்கதையில் மையமாக இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
படத்தின் கதையில், ராணுவத்தில் பணியாற்றும் ஷாருக்கான், தனது இளமைவயது மகள் சுஹானாவுடன் சேர்ந்து, குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய துயரமான சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக நிகழ்வுகளை எதிர்கொள்கிறார் என்ற கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறதாம்.