தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் நடிகராக பெயர் பெற்றவர் நானி. அவர் தற்போது தயாரித்துள்ள திரைப்படம் ‘கோர்ட்’ எனும் பெயரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ளார், மேலும் இதில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி மற்றும் சிவாஜி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகிய இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.15.90 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்போது இப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனம் வால் போஸ்டர் சினிமா தனது எக்ஸ் (X) தளத்தில் படம் தொடர்பான வசூல் விபரங்களை பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவின்படி, ‘கோர்ட்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்தப் படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலையும் செய்துள்ளதாகும் குறிப்பிடப்பட்டுள்ளது.