ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், இந்த படத்தில் ரஜினியை மனதில் வைத்து தான் பல மாற்றங்களை செய்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, இதற்கு முன்பு எனது படங்களில் நான் எனது பாணியை முழுமையாக பயன்படுத்தி இயக்கியிருந்தேன். ஆனால் ‘கூலி’ படத்துக்கு ரஜினியை மையமாக கொண்டு ஒரு தனி ஸ்டைல் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், அதற்கேற்ப எனது இயக்க பாணியையும் மாற்றி காட்சிகளை வடிவமைத்துள்ளேன்.

எனது முந்தைய படங்களில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்ததைப் போலவே, ‘கூலி’யிலும் வன்முறை காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் இது ஒரு ரஜினி படம் என்பதால், அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் இந்த காட்சிகளை இயக்கியுள்ளேன். ‘கூலி’ படம் நூறு சதவீதம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாரும் புறக்கணிக்கப்படவில்லை. எனவே இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் ரசிகர்களும் திரையரங்கிற்கு வந்தபோது எந்த குறையும் இல்லாமல் முழுமையாக திருப்தி அடைந்து வெளியேறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.