எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம் அன்பே வா. இதில் இடம் பெற்ற, புதிய வானம் புதிய பூமி.. பாடல் மிகப் பிரபலமானது.
இந்த படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், குறிப்பிட்ட பாடலை முழுதுமாக நீக்க வேண்டும் என்றனர்.
படக்குழுவினர் பதறிப்போய் ஏன் என்று கேட்டனர்.
அதற்கு சென்சார் அதிகாரிகள், உதய சூரியன் என்கிற வார்த்தை கட்சி சின்னத்தை குறிக்கிறது என்றனர்.
அந்த வார்த்தைதானே பிரச்சினை அதை மாற்றலாம் என்றனர், படக்குழுவினர்.
பாடலை எழுதிய வாலி, உதய சூரியன் என்பதை, புதிய சூரியன் என மாற்றினார்.
பாடலை பாடிய டி.எம்.எஸ்ஸை உடனடியாக வரவழைத்து, வார்த்தை மாற்றி பாட வைதது படத்தில் சேர்த்தனர்.
அதன் பிறகுதான் சென்சார் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..