Wednesday, April 10, 2024

புதிய போஸ்டர்:  ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸ் தேதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுள்ளது. இப்படம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், பின்பு அடுத்த மாதமான 2024 ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ‘கில்லர் கில்லர்…’ என்ற முதல் பாடல் மற்றும் ‘உன் ஒளியிலே…’ என்ற இரண்டாவது பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ஏற்கனவே பொங்கல் வெளியீடு எனப் படக்குழு குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

Read more

Local News