அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லவ் மேரேஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் முன்னணி நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறை நேரத்தில் இப்படம் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் முதல் பாடலாக “கல்யாண கலவரம்” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டனே எழுதியும், பாடியும்க் காணப்படுகிறார். இதனுடன், இப்பாடலின் பின்னணிக் காட்சிகள் (BTS) வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், திருமணம் தாமதமாகும் காரணத்தால் ஒருவருக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைப் பேசும் ஒரு முக்கியமான கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.