Wednesday, February 24, 2021
Home சினிமா செய்திகள் பாலிவுட் ஒளிப்பதிவாளர் இயக்கும் தமிழ்த் திரைப்படம்

பாலிவுட் ஒளிப்பதிவாளர் இயக்கும் தமிழ்த் திரைப்படம்

‘பிக்பாஸ்’ மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார்.

உன் பார்வையில்’ என்ற இப்படத்தை Kaho na pyar hai’, ‘Pardes’, ‘Taal’  போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளரான கபிர் லால் இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப் படமாகும்.

இந்த ‘உன் பார்வையில்’ படத்தினை  Lovely World Production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அஜய் சிங் தயாரிக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்காலாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள். படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது.

இத்திரைப்படம் பற்றி நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பேசும்போது, “Kaho na pyar hai, ‘Pardes’, ‘welcome back’ போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன்.

அவர் என்னிடம் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது. என் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே இத்தனை நாட்கள் காத்திருந்து போல் தோன்றியது. படம் அழகாக உருவாகி வருகிறது…” என்றார்.

நாயகி பார்வதி நாயர் பேசும்போது, “நடிப்புக்கு சவால் தரும் கதாப்பாத்திரம் என்னுடையது. இந்தப் படத்தில் என் முழு உழைப்பை தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச் சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும்  அமைக்கும்விதமும், அதை படமாக்கும் விதமும் பிரமிப்பானது…” என்றார்.

இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பரபரப்பாக உருவாகி வரும் இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

“என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்” ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல் சொல்கிறார்..!

சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்பு பத்திரிகையாளர்களை...

சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’

டி.பி.கே. இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லி பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘மாயமுகி’. தமிழ் மற்றும் தெலுங்கு என  இரு மொழிகளிலும்...

மலையாள நடிகர் இன்னசென்ட்டின் வேடத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்..!

இயக்குநர் மணிரத்னம் ஒரு ஓடிடி தளத்திற்காக அந்தாலஜி வகை படம் ஒன்றை தற்போது தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 4 கதைகளை இயக்குநர்கள் பிரியதர்ஷன்,...

OTT வலையில் வீழ்ந்த அடுத்த திரைப்படம் ‘டெடி’

நேற்றுதான் ‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகச் செய்தி வந்தது. இந்தச் செய்தி வந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்த விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது....