90ஸ் கிட்ஸ்-ன் சூப்பர் ஹீரோ சக்திமான் தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது. இதில் சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். இத்தொடர் திரைப்படமாக உருவாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்படத்தை மலையாளத்தில் ‘கோதா, மின்னல் முரளி’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவரும், நடிகருமான பசில் ஜோசப் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சக்திமானாக ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பதாக கூறப்பட்டது.பல நாட்களாக படம் பற்றிய அறிவிப்பு எதுவும் வராத நிலையில் கைவிடப்பட்டதாக செய்தி வெளியானது. அதேநேரத்தில் சக்திமானாக அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளதாக மற்றொரு செய்தியும் பரவியது. இந்த இரு செய்திகளுக்கும் மறுப்பு தெரிவித்துள்ள பசில் ஜோசப், ”ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே ‘சக்திமான்’ உருவாகும் என்றுள்ளார்.
