தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா, அதுபோல முன்னணி நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதம் கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்த அனுபவம் பெற்றவர்கள்.

இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் ஒன்றாகக் கைகோர்க்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் விரைவில் உறுதி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க இருக்கின்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கின்றது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.