சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், ச”மீபத்தில் தான் கோச்சடையான் படத்தின் ஓ எஸ் தான் வெளியிட்டேன். ஏன் இவ்வளவு தாமதம் என்றால், மணிரத்தினம் சார் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சீரியலில் கிரிடிட் இல்லாமல் என்னுடைய இசையை பயன்படுத்துகிறார்கள்.
எந்த ஒரு கிரிடிட்டும் இல்லாமல் வருவது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரிஜினல் ஸ்கோர் சிஸ்டம் வரும் வரைக்கும் ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று நினைத்தேன். இப்போதெல்லாம் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அது, இது என்று மாற்றுகிறார்கள். பெயர் தப்பாக போடுகிறார்கள். இந்த பயத்தினால் தான் நான் ரிலீஸ் பண்ணாமல் இருந்தேன்” என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்