Friday, April 12, 2024

ஓடிடிக்கு போகும் இன்னுமொரு தமிழ்ப் படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் என்னங்க சார் உங்க சட்டம்.’

பீச்சாங்கை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்.எஸ்.கார்த்திக், இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஐரா, பகவதி பெருமாள், ரோகிணி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சன்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர்’ கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – குணா பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு – அருண் கிருஷ்ணா, படத் தொகுப்பு – பிரகாஷ் கருணாநிதி, கலை இயக்கம் – Teejay,  பாடல்கள் – கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜு, ஒப்பனை – தேஜா, ஒலிப்பதிவு – கிருஷ்ணன் சுப்ரமணியம், பாடகர்கள் – பென்னி தயால், வினீத் ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன், டப்பிங் இன்ஜீனியர் – அருண் உமா, புகைப்படங்கள் – ராம் பிரசாத், டி.ஐ. – ்ரீராம். இயக்குநர் பிரபு ஜெயராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படம் தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கதைக் கருவில் உருவாகியுள்ளது.

தமிழக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக் குழு படத்தினை முடித்து, தணிக்கை (UA) சான்றிதழையும் பெற்றுவிட்டது.

 
“படம் ஒரு பக்கத்தை சார்ந்ததாக இருக்காது
; நிச்சயமாக இரண்டு பக்க நியாயங்களை கூறுவதாக இருக்கும்” என படக் குழுவினர் உறுதியாய் கூறுகிறார்கள். இந்தக் கருவில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி படம் பேசும்.

இயக்குநர் பிரபு ஜெயராம் படத்திற்காக நிறைய தரவுகளை ஆராய்ந்து அதன்படி  படத்திற்கான திரைக்கதையை அமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு  படம் எப்படி இருக்குமென்கிற பெரும்  ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது.

படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்குத் தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்தது, இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் தீவிரமாக  சொல்வதாக இருக்குமாம்.

இப்படத்தில் இருக்கும் மேலும் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூன்று புதிய போஸ்டர்களும் படத்தின் கதையின் மையத்தை கூறி பெரும் ஆர்வத்தை தூண்டும்விதமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வகும் அக்டோபர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.  

- Advertisement -

Read more

Local News