‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வினோதினி வைத்தியநாதன். தொடர்ந்து ‘ஓ.கே. கண்மணி’, ‘அப்பா’, ஜிகிர்தண்டா’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றார்.
சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்திருந்தார்.
இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இவரது பதிவுகள் ரசிகர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தொண்டர்களிடையே பேசுபொருளாகி இருக்கின்றன.
இந்த நிலையில் அவர், கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைந்துள்ளார். இது தொடர்பாக நடிகை வினோதினி டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.