‘திருடா திருடா’ படத்தில் ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு, ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்’ என்ற பாடலுக்கு நடனம் ஆடிய அனு அகர்வாலை மறக்கவே முடியாது.
இந்தப்படத்தின் மூலம், 1990களில் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
அதன்பிறகு, பல படங்களில் கிளாமர் ரோல்களில் துணிச்சலாக நடித்து புகழின் உச்சியில் இருந்தார். ஆனால் இவர் 1994-ம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.கடந்த
பல வருடங்களுக்குப் பிறகு, இவரதுபுகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து கூறிய அவர், “1999-ம் ஆண்டு நான் ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றேன். விபத்துக்கு பிறகு, எனக்கு எல்லாம் மறந்து விட்டது, ஆனால் எனது பெயர் மட்டும் எனக்கு நியாபகம் இருந்தது. நான் 2001-ம் ஆண்டு எனது தலையை மொட்டையடித்து சன்னியாசியாக மாறிவிட்டேன். கையில் ஒரு பையுடன் எளிமையான வாழ்க்கையை வாழத்தொடங்கினேன். எளிமையான சூழலில், மனதை பற்றியும், மனிதர்களை பற்றியும் படித்துக் கொண்டே வாழ்ந்து வந்தேன்
அதன் பிறகு எனது பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். எனது மேக்கப் இல்லாத படங்கள் வைரலானது. பிறகு எனது பழைய படங்களைக் காண்பித்தார்கள் மெல்ல மெல்ல பழைய நினைவுகள் வர ஆரம்பித்தன” என்கிறார் அனு அகர்வால்.
சினிமாவைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது இவரது வாழ்க்கை!