நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் அமீர், விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் இதை முதலில் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
’தலைவர்கள் யாரும் வானத்திலிருந்து குதிப்பதில்லை, நம்மில் ஒருவர் தான் தலைவராக வருகிறார்கள்.. வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்று பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்வது மாதிரி, விஜய் தனது புதிய படத்திற்கு முதல் நாள் காட்சிக்கு 1500 ரூபாய் டிக்கெட் வாங்குவதும் நேர்மையற்ற செயல் தான் என்று சொல்ல வேண்டும்.
சமூகத்தை சரி செய்வதாக இருந்தால் எல்லாவற்றையும் செய்ய வேண்டும், மக்கள் ரொம்ப நாட்களாக தங்கள் வாழ்வியலை திரையரங்குகளில் அமைத்திருக்கிறார்கள், அதுதான் பெரிய சாபக்கேடு என்று தெரிவித்துள்ளார்.