Monday, January 6, 2025

குழந்தையுடன் பாரம்பரிய உடையணிந்து விதவிதமான போஸ் கொடுத்த அமலாபால்… வைரல் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். முதல் படத்தில் ஏடாகூடமான கேரக்டரில் நடித்த போதிலும் கிடைக்காத கவனம் அடுத்ததாக மைனா படத்தில் மிகவும் ஹோம்லியான அப்பாவித்தனமான கேரக்டரில் நடித்ததின் மூலம் அமலா பாலுக்கு கிடைத்தது. தொடர்ந்து கோலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறி விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நாயகியாக நடித்துள்ளார் அமலா பால். ஒரு கட்டத்தில் பிசியாக நடிகையாக நடித்துக் கொண்டிருந்தபோதே இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. இதையடுத்து இருவரும் மனமொத்து பிரிந்தனர். ஒரு கட்டத்தில் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். இவர்களுக்கு கடந்த ஆண்டில் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு இலை என்று பெயர் வைத்துள்ளார் அமலா பால். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் அடுத்தடுத்து க்யூட்டான தருணங்களை செலவழித்து வருவதுடன் அதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

 இந்நிலையில் தற்போது தன்னுடைய மகனை வேட்டி சட்டையில் அலங்கரித்து அவருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த படங்களில் அவரது மகன் மாப்பிள்ளை போல ஜொலிக்கிறார். அமலா பாலின் கெட்டப்பும் சிறப்பாக காணப்படுகிறது. அவரும் புடவையில் ஜொலிக்கிறார். தன்னுடைய மகனுடன் இணைந்து ரசிகர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை அமலா பால் பகிர்ந்துள்ளார். தன்னுடைய உடலை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்கும் திட்டத்தில் அமலா பால் உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News