தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. 2011-ஆம் ஆண்டில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பிரியாணி’, ‘சிங்கம் 2’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். 2022-ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் அரண்மனையில் அவர் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், ‘மை 3’ என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். ஹன்சிகா சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், ஒரு சில காலம் சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்திருந்தார். தற்போது, சில புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “மும்பையில் பிறந்தாலும், மனதால் நானும் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு” எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.