அஜித் – விஜய் ரசிகர்கள் ஆக்ரோசாக மோதிக்கொள்ளுவம் விசயம் தெரிந்ததுதான். அந்தக் காலத்தில் எம்ஜிஆர் – சிவாஜி ரசிகர்களும் அப்படித்தான் இருந்தனர்.
அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், ரசிகர்களுக்கு ஒரு விசயத்தைப் புரிய வைத்தது.
சிவாஜி – எம்ஜிஆர் படங்களுக்கு கடும் போட்டி இருந்தது. ஆனால் அவர்களுக்குள் பொறாமை இல்லை.
எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது அதன் பிரிமியர் காட்சியில் சிவாஜி குடும்பத்தினர் நிச்சயம் இருப்பார்கள். அதே போல சிவாஜியின் படங்களி பிரீமியர் ஷோ என்றால் எம்.ஜி.ஆர் குடும்பத்தினர் பார்த்து ரசிப்பார்கள்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட காலகட்டத்தில்தான் அவர் தயாரித்து, இயக்கி, நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன் ’ திரைப்படம் வெளியானது. அப்போது ஆளும் கட்சியினரின் எதிர்ப்பால், படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் பயந்தனர்.
அந்த நேரத்தில், சிவாஜி தாமாகவே முன்வந்துஎம்ஜிஆரிடம் , “வேறு யார் கொடுக்கலை என்றாலும் பரவாயில்லை, என் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள்” என்றார்.
ஆனால் எம்ஜிஆரோ, “இப்படி செய்தால், ஆளுங்கட்சியினர் சிவாஜிக்கு பிரச்சினை ஏற்படுத்துவார்களே” என யோசித்தார்.
ஆனாலும், படம் வெளியாகும் போது அதன் பிரீமியர் ஷோவை சிவாஜி கணேசன் தியேட்டரில் தான் திரையிட்டார் எம்ஜிஆர். அப்போது சிவாஜியை தவிர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து படத்தை பார்த்தனர்.
அந்த அளவுக்கு இருவரும் நண்பர்களாக இருந்தனர்.
இந்த தகவலை இதயக்கனி விஜயன் யு டியுப் சேனல் பேட்டி ஒன்றில் கூறினார்.