Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

தங்களது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அஜித் மற்றும் ஷாலினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த திரைப்படம் ‘அமர்க்களம்’. சரண் இயக்கிய அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஷாலினி காயமடைந்து சிகிச்சை பெற்றார். அப்போது, அஜித் அவரை மனம் கனிந்த அக்கறையுடன் கவனித்தார்.

நடிகை ஷாலினியும் அஜித்தும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஷாலினி நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றிப் படங்களாகியிருந்தன. பல தயாரிப்பாளர்கள் அவருக்கு பட வாய்ப்புகளை வழங்க ஆவலாக இருந்தனர். ஆனால், ஷாலினி சினிமாவை விட்டுவிட்டு இனிமேல் நடிக்கமாட்டேன் என முடிவெடுத்தார்.

தற்போது, அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் திருமணம் ஆனது 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை நினைவு கூறி, அவர்கள் இருவரும் கேக் வெட்டி தங்கள் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News