தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், “1991 ஆம் ஆண்டு ராமராஜன், ஐஸ்வர்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த “ஊரெல்லாம் உன் பாட்டு” நடித்தேன். திரைப்படத்தை சிராஜ் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள், அதிக ரசிகர்கள் கூடிவிட்டார்கள். அப்போது கூட்டத்தில் ஒருத்தர் என்னைக் குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தையைக் கூற.. அதே விநாடி கண்டபடி திட்டிவிட்டேன். என்னைப்போலத்தான் எல்லா பெண்களும் இருக்க வேண்டும். யாராவது டீஸ் செய்தால் பயந்துகொண்டு விட்டுவிடக்கூடாது. லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட வேண்டும்” என்றார் ஐஸ்வர்யா.