பாலிவுட்டின் மூத்த நடிகர் சத்ருகன் சின்கா மீது பாலியல் புகார் எழுப்பிய நடிகை

பாலிவுட்டின் மூத்த நடிகரான சத்ருகன் சின்கா மீது நடிகை பூஜா மிஸ்ரா பாலியல் புகார் கூறியுள்ளார்.

“நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை வைத்துதான் தன் மகள் சோனாக்ஷி சின்ஹாவை நடிகை ஆக்கினார்” என்று நடிகை பூஜா மிஸ்ரா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சத்ருகன் சின்கா 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நடிகர் ரஜினிகாந்துக்கு பாலிவுட் உலகத்தின் குரு என்றே அழைக்கப்படுபவர். தற்போது அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி திருணாமூல் காங்கிரஸில் சேர்ந்துள்ளார். மேற்கு வங்காளத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் இவர் மீது பிரபல பாலிவுட் நடிகையான பூஜா மிஸ்ரா பாலியல் புகார்களை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூஜா மிஸ்ரா. இவர் ஆரம்பத்தில் மாடலாகத்தான் இருந்தார். அதன் பிறகுதான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்.

சத்ருகன் சின்கா பற்றி பூஜா மிஸ்ரா பேசுகையில், “நடிகர் சத்ருகன் சின்கா எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். என்னை மயக்கமடையச் செய்து என்னை வைத்து பாலியல் தொழில் செய்து இருந்தார்.

எனது கன்னி தன்மையை விற்பனை செய்துதான் பேஷன் டிசைனராக இருந்த தன் மகளை நடிகையாக்கினார். எனக்கு எதிராக சத்ருகன் சின்கா பில்லி சூனியம் செய்து இருந்தார்.

ஒரு காலத்தில் என் தந்தையும், சத்ருகன் சின்ஹாவும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அப்போது சத்ருகனின் மனைவி என் தந்தையை மூளைச் சலவை செய்து பாலிவுட் விபச்சாரம் செய்ய மட்டுமே உதவும் என்று கூறி என்னை சினிமா துறையில் நுழைய விடாமல் தடுத்து விட்டார்.

பின்னர் என் தந்தை 2005-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று புனேவிற்குச் சென்றுவிட்டார். ஆனால், என்னை சத்ருகன் சின்ஹாவும் அவர் மனைவியும் மும்பையில் தொடர்ந்து தங்கும்படி நிர்ப்பந்தம் செய்தார்கள்.

அதோடு சத்ருகன் சின்ஹாவும், அவர் மனைவியும் சேர்ந்து என்னிடமிருந்து 35 படங்களைத் திருடி விட்டனர். மொத்தத்தில் சத்ருகன் சின்கா குடும்பம் ஒரு பேராசை பிடித்தது. அது மட்டும் இல்லாமால் சத்ருகன் சின்ஹாவும், அவர் மனைவியும் எனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து எனது ஸ்பான்சர்களின் பட்டியலைத் திருடிவிட்டனர்.

ஒரு முறை சத்ருகன் சின்ஹாவின் பிறந்த நாளுக்கு நான் சென்ற போது எனக்கு எதையோ கொடுத்து சாப்பிடச் செய்து பில்லி சூனியம் வைத்தனர்.

மேலும், 2007-14-ம் ஆண்டுவரை லோகண்ட்வாலாவில் உள்ள எனது வீட்டில் தங்கியிருந்தேன். எங்களது வீட்டிற்கு மேல் சத்ருகன் சின்ஹா தங்கியிருந்தார். நான் சிங்கப்பூரில் ஷாப்பிங் முடித்து வந்தால்போதும் அவர்கள் என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்தப் பொருள்களைத் திருடிவிடுவர்கள். மேலும், சத்ருகன் சின்ஹாவால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நான் பாலிவுட்டில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம் சத்ருகன் சின்ஹாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. இதனால், நான் என் வாழ்க்கையில் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன்…” என்று கூறியிக்கிறார்.

இப்படி பூஜா அளித்திருக்கும் புகார் தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு சத்ருகன் சின்கா தரப்பிலிருந்து இன்னமும் பதில் வரவில்லை.