பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அதன்பின்னர் இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக அறிவிப்பு வெளியானது.
தற்போது இப்படத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷினி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.