7
actress trisha leo vijay
விஜய், லோகஷ் கனகராஜ்ஜுடன் கூட்டணி அமைத்து தனது 67வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘லியோ’ என பெயரிட்டுள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.
படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை திரும்பிய திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த லியோ படம் குறித்து ரீட்வீட் செய்திருந்த ட்வீட்களை டெலிட் செய்துள்ளார். இதனால், திரிஷா லியோ படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தான் படப்பிடிப்பிலிருந்து பாதியில் வந்ததாகவும் சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட ஆரம்பித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் “திரிஷா தான் ரீ-ட்வீட் செய்வதை ஒரு சில நாட்களில் டெலீட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படித்தான் லியோ படம் குறித்து சில பதிவுகளை நீக்கினார். இடையில் சிறு இடைவேளை கிடைத்ததால் சென்னை திரும்பினார். மீண்டும் காஷ்மீர் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார்” என்கின்றனர், தகவல் அறிந்த திரையுலகினர்.