Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

சன்னி லியோன் நடிக்கவிருக்கும் புதிய தமிழ்த் திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவில் தற்போது அதிகமாக தேடப்படும் நடிகையாக இருக்கும் சன்னி லியோன் ஒரு புதிய தமிழ்ப் படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.V.சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா  ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தீபக் D.மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,  ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தை இயக்குநர் யுவன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தமிழில் சிந்தனை செய்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் யுவன் இந்தப் படம் குறித்து பேசும்போது, “எனது இயக்கத்தில் உருவான சிந்தனை செய்’ படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது.

பின்னர் தெலுங்கில் ‘கதர்னாக்’, ‘ரணம்’ மற்றும் பல படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றினேன். தற்போது மீண்டும் இப்படம் மூலம் தமிழுக்கு திரும்பியிருக்கிறேன்.

ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழக ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நம்முடைய தமிழகத்து மக்கள் ஹாரர் காமெடியை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் ஒரு புதுமையான ஹாரர் காமெடி திரைக்கதையை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளேன். முதல்முறையாக இப்படம் வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடி கதையினை  சொல்லும் படமாக இருக்கும்.

இப்படத்தில் மிகவும் முக்கியமான, முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். வேறு நாயகிகள் நடிப்பதைவிடவும் சன்னி லியோன் மாதிரியான ஒரு ஹீரோயின், அந்தக் கதாபாத்திரத்தை செய்யும்போது அக்கதாபாத்திரத்திற்கு ஒரு புது அடையாளம் கிடைக்கும் என நினைத்தோம். ரசிகர்கள் கண்டிப்பாக அவரை திரையில் கொண்டாடுவார்கள்.

படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம்பலூர், துறைமுகம் மற்றும் மும்பையில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News