தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஸ்ரீலீலா, தற்போது தமிழில் சுதா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எந்த வகை கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “எனக்கு இப்போது 24 வயதுதான் ஆகிறது. எனவே காதல் மற்றும் காதல் கலந்த நகைச்சுவை படங்களில் நடிக்க விரும்புகிறேன். என் மனநிலையும் இப்போது அதற்கே ஏற்ப உள்ளது.
இன்றைக்கு பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் அதிகரித்துள்ளன. பெண்களின் வலிமையையும், ஊக்கத்தையும் வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட கதைகளைப் பார்க்கும்போது, நானும் அப்படிப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது” என்று கூறினார்.