பிறந்த ஆண்டில் பாலிவுட் திரையுலகில் ஹாரர் படங்கள் பெருமளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியிருந்தன. குறிப்பாக ‘ஷைத்தான்’, ‘முஞ்யா’, ‘ஸ்ட்ரீ 2’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், இதுவரை எந்த ஹாரர் படத்திலும் நடிக்காத ராஷ்மிகா மந்தனா, தற்போது அந்தத் துறையில் கால் பதிக்கத் தீர்மானித்துள்ளார். அதற்கேற்ப, ‘ஸ்ட்ரீ’, ‘ஸ்ட்ரீ 2’, ‘முஞ்யா’ போன்ற ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம், ராஷ்மிகா மந்தனாவை மையமாகக் கொண்டு புதிய ஹாரர் படத்தை தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு ‘தாமா’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘முஞ்யா’ திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில், கதாநாயகனாக ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘தாமா’ படத்தின் படப்பிடிப்பு குறித்த ஒரு தகவலை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘‘படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடைபெறும்’’ என தெரிவித்துள்ளார்.