Saturday, September 21, 2024

ரகுல் ப்ரீத்சிங்கும் காதலில் விழுந்தார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங்.

அதன் பின்னர், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ரகுல் பிரீத் சிங், தான் ஒருவரைக் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்ததோடு இல்லாமல் தனது காதலனையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரைத்தான் காதலிப்பதாக ரகுல் ப்ரீத் சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது “இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு நீ. என் வாழ்வை வண்ண மையமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி” என்று குறிப்பிட்டு காதலனுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

- Advertisement -

Read more

Local News