மலையாளத்தில் உருவாகியுள்ள ‘பெண்ணு கேஸ்’ திரைப்படத்தில் நடிகை நிகிலா விமல், பல ஆண்களை திருமண மோசடி செய்து ஏமாற்றும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ‘மருதமலை’ படத்தில் வடிவேலுவிடம் சிலர் வந்து “ஒரு பெண் நம்மை ஏமாற்றிட்டாங்க” என்று கூறும் காட்சியை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
டீசரைக் காணும் போதே இப்படம் நகைச்சுவை அம்சத்துடன் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. பெபின் சித்தார்த் இயக்கியுள்ள இந்த படம் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.