நடிகர் ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் பெங்களூருவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கார விபத்தில், அவரது தந்தை சி.பி. சாக்கோ உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஷைன் டாம் சாக்கோ படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்திற்கு பின்னர், நடிகை மீரா ஜாஸ்மின் அவருக்கு ஆறுதல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், துக்கம் என்பது ஒரு கடினமான உணர்வாகும். இப்படியான தருணங்களில் நாம் ஒருவரை ஒருவர் கருணையுடன் அணுக வேண்டும். ஷைன் டாம் சாக்கோவின் குடும்பத்திற்காக எனது பிரார்த்தனைகள் என்றும், அவர்களுக்கு இறைவன் ஆறுதல் வழங்க வேண்டும் என வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘ரன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மீரா ஜாஸ்மின், தொடர்ந்து ‘சண்டக்கோழி’, ‘ஆயுத எழுத்து’, ‘ஆஞ்சநேயா’, ‘திருமகன்’, ‘நேபாளி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர். மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்தார். 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் களமிறங்கிய இவர், சமீபத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடித்த ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.