Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“விமானத்தில் மிரட்டிய நபர்!: நடிகை அம்ரிதா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

படைவீரன் என்கிற படத்தில்தான் அம்ரிதா கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், முன்பே தெறி, லிங்கா, போக்கிரி ராஜா, யட்சன் என சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தோன்றி இருக்கிறார்.

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தென்றல் எனும் கால்பந்து வீராங்கனையாக நடித்து கவனத்தை ஈர்த்தவர், சமீபத்தில் வெளியான லிஃப்ட் மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் காஃபி வித் காதல் படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார்.

இவர் ஒரு பேட்டியில், “சமீபத்தில் விமானத்தில் சென்னை வந்தேன். அப்போது பக்கத்து இருக்கையில் இருந்த நபரைப் பார்த்தாலே பயமாக இருந்தது.  முரட்டு மீசையுடன், பார்ப்பதற்கே டெரராக இருந்தார். அவரது பார்வையும் மிரட்டலாக இருந்தது.

சில நிமிடங்களில் அவர் ஏதோ பேச்சு கொடுக்க.. நான் சில வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டேன். ஆனால் அவர் பேசப்பேத்தான்  நல்ல மனிதர் என்பதைப் புரிந்துகொண்டேன். ஒருவரைப் பார்த்தவுடன் எடை போடக்கூடாது என்பதை இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News