மலையாள படங்களில் நடிக்கத் துவங்கி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட தென்னிந்த மொழிகளில் நடித்து வருகிறார் நித்யா மேனன். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி, மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.
எப்பவுமே வெளிப்படையாக பேசுபவர். மனதில் உள்ளதை மறைக்கமாட்டார்.
இவரிடம், “ஒரே படத்தில் இரு ஹீரோயின்கள் நடிக்கும்போது, போட்டி பொறாமை ஏற்படுமா” என்று கேட்கப்பட்டது.
அதற்கு நித்யா மேனன்ல, “நிச்சயமாக ஏற்படாது. அப்படியான சூழலில் நாங்கள் அன்பாக பழகுவோம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்போம். வெளி நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போதும் உற்சாகமாக பேசிக்கொள்வோம். ஒருவரை ஒருவர் பாராட்டவும் தவறுவதில்லை.
ஒரு ஆடியோ நிகழ்ச்சியில் நடிகை ராஷி கண்ணா என்னைப் பற்றி பாராட்டி பேசினார்.
ஆனால் ஹீரோக்களுக்குத்தான் ஈகோ உண்டு. பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்க மாட்டார்கள். அப்படியே நடித்தாலும் தனக்கே அதிக காட்சிகள் வேண்டும் என்பார்கள்” என்று வெளிப்படையாக கூறினார் நித்யா மேனன்.