Monday, September 27, 2021
Home HOT NEWS இயக்குநராகிறார் நடிகர் விஜய் ஆண்டனி..!

இயக்குநராகிறார் நடிகர் விஜய் ஆண்டனி..!

பேரார்வம், பயிற்சி  மற்றும் அர்ப்பணிப்பு உள்ள ஒரு தனி நபரை, எந்தவொரு களமும் திறமைசாலியாக மாற்றிவிடுகிறது. திரைத்துறையில் இதற்கு எடுத்துகாட்டாக பல நிகழ்வுகள் உள்ளன. விடாமுயற்சி, பொறுமை மற்றும் ஆர்வம் ஆகியவை இத்துறையில் பல தனி நபர்களுக்கு, பெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளன.

ஒரு இசையமைப்பாளராக, நடிகராக மற்றும் தயாரிப்பாளராக பல பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களைத் தந்தவர் விஜய் ஆண்டனி.  இத்துறையில் பல பரிணாமங்களில் அவரது திறமையை நிரூபித்த பிறகு, தற்போது இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் இத்தருணத்தில் இந்த  சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில், தனது Vijay Antony Film Corporation நிறுவனம் மூலம்,  தயாரிக்கப்படும் பிச்சைக்கரன்-2’ திரைப்படத்தை தான் இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து விஜய் ஆண்டனி பேசும்போது, “எனகு நீண்டகால கனவு இறுதியாக தற்போது நனவாகிறது.  இந்த புதிய அவதாரம் எனக்குள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. 

நீண்ட காலமாக எனது மனதில் இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது. ஒரு நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும், நான் உதவி இயக்குநராகவும்  பணியாற்றியுள்ளேன், பல்வேறு திரைப்பட இயக்குநர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும் துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது  நன்மை தரும் அம்சமாகும்.   இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இத்துறையில் சிறந்ததொரு  வெற்றியைப் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம்.

எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும், இந்த திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நான்  இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

எனது பிறந்தநாளின் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், பிச்சைக்கரன்-2’ திரைப்படத்தில், இயக்குநராக எனது புதிய பயணம் துவங்குவதை, உங்களுக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

மிகப் பெரிய பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக  இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகைகளுடன்  பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. 

ரசிகர்களுக்கு செண்டிமென்டும்,  பொழுதுபோக்கும்  சரி விகிதத்தில் கலந்த சிறப்பானதொரு அனுபவத்தை இந்தப் பிச்சைக்கரன்-2’ திரைப்படம் தரும்.

இப்படத்தில்   நடிக்கவுள்ள  நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்…” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

பேய் மாமா – சினிமா விமர்சனம்

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் ஏலப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக...

‘வீராபுரம்-220’ – சினிமா விமர்சனம்

ஸ்ரீவைசாலி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குணசேகரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக ‘அங்காடி தெரு’ புகழ் மகேஷ் நடித்திருக்கிறார். நாயகியாக...

ச்சூ மந்திரக்காளி – சினிமா விமர்சனம்

அன்னம் மிடியாஸ் சார்பாக தயாரிப்பாளர் அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரித்துள்ளார். புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன்...

சின்னஞ்சிறு கிளியே – சினிமா விமர்சனம்

செண்பா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்நாதன் இந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ படத்தைத் தயாரித்திருக்கிறார்..! இந்தப் படத்தில் செந்தில்நாதன், சண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி...