கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ படம் மே ஒன்றாம் தேதியான இன்று திரைக்கு வந்துள்ள நிலையில், கங்குவாவில் தவறவிட்ட வெற்றியை இந்த படம் மீட்டுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் சூர்யா.

இந்த படம் தவிர்த்து இன்று சசிகுமார், சிம்ரன் நடித்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி, நானி நடித்த ஹிட்- 3, அஜய் தேவ்கன் நடித்த ரெய்டு -2 ஆகிய படங்களும் திரைக்கு வந்துள்ளன. அதனால் தனது ரெட்ரோ படத்துடன் வெளியாகும் இந்த படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டு இருக்கிறார் சூர்யா.
தன் படம் வெளியாகும் அதே நாளில் திரைக்கு வரும் மற்ற படங்களை தனக்கு போட்டியாக நினைக்காமல் அந்த படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று சூர்யா வாழ்த்து தெரிவித்திருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது.